அன்றழுத குரல் எந்தன் அயல் வீட்டின் குரலல்லவா...

'ஐயோ....அம்மா....ஆராவது வாங்கோவன்....
இன்றும் நினைவகலா அழுகையது
கோடி சுற்றி ஓடியோடிக்
கும்பிட்ட தெய்வமேதும்
அவள் துயரில்
ஒரு குரல் கூட எழுப்பவில்லை...

கொஞ்சம் கொஞ்சமாய்
உடல் துளாவி
உடை கிழித்து
மரண வாசலில் துடிதுடிக்க
மாறி மாறி அவள் உடல் கிழிபட்ட
துயர் சொல்ல எனக்குத் துணிச்சலில்லை....

ஊர் எல்லைவரையிலுமாய் அந்தக்குரல்
இப்பவும் தான் நினைவிருக்கு.
அவள் குரல்தான் அது
புரிந்திருந்தும் காப்பாற்ற
ஒரு புழுவும் அசையவில்லை....

இருபதுக்கும் மேலானோர்
ஒருத்தியின் உடல் உழுத
உண்மை புரியாது இன்னும்
ஆமிகளை நேசிக்கும்படியான
வார்த்தைப் பூச்சுக்கள்....
எப்படித்தான் ஜீரணிக்க....?
அன்றழுத குரல் என்
அயல்வீட்டின் குரலல்லவா...!

மூச்சிழந்து போனபின்னும்
மும்பைக்காரச் சிப்பாயின்
கோரம் அடங்காமல்
மீண்டும்....மீண்டும்.....
அடுத்தடுத்துக் கொடியவரின் வெறி
அவள் உடலில்....

வேலியெங்கும் துப்பாக்கிக் கூலிகளின்
வாயெங்கும் வீணி வடிந்தபடி....
படுகிழவியென்றாலும் பயவாயில்லை
பாவியரின் கண்ணெல்லாம் அதுவா....
வல்லுறவு கொண்ட துயர்
வடிக்கவா முடியும் வார்த்தைக்குள்......

(உயிர்வாசம் கவிதைத் தொகுப்பிலிருந்து...)

2 Kommentare:

M.Rishan Shareef 11. August 2009 um 02:25  

:(

www.bogy.in 15. April 2010 um 02:17  

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Kommentar veröffentlichen

About this blog